தீபாவளியை கலகலப்பாக்க லட்டு…!! இது எப்படி செய்யணும் தெரியுமா…?
தேவையான பொருட்கள் :
- கடலை மாவு – 200கி
- உப்பு – சிறிதளவு
- கேசரி பவுடர் – சிறிதளவு
சர்க்கரை பாகு :
250கி சர்க்கரையை எடுத்து அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வருமளவுக்கு காய்ச்ச வேண்டும்.
செய்முறை :
கடலை மாவு, உப்பு, கேசரி பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடான பிறகு, கலக்கி வைத்துள்ள கடலை மாவு எடுத்து, பூந்தி கரண்டியின் மேல் ஊற்றி எண்ணையில் விழுமாறு ஊற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது இந்த கடலைமாவு கலவை பூந்தி போன்று சிறிது சிறிதாக வரும். 40 அல்லது 50 வினாடிக்குள் எடுத்து விட வேண்டும். பின் அதை எடுத்து மிக்சியில் 5 வினாடி அறைத்து விட்டு எடுத்து, அதில் சிறிதளவு முந்திரி, திராட்சை போட்டு அதில், சர்க்கரைப்பாகை ஊற்றி கிளறி, அதனை மிதமான சூட்டில் உருண்டை பிடிக்க வேண்டும்.