தியேட்டரில் ரிலீஸாகும் சூரரைப்போற்று.!? வசூல் முழுவதும் தியேட்டர்காரர்களுக்கே.!?
“சூரரைப்போற்று” படத்தை திரையரங்குகளில் வெளியீட முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார்.
படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் நேரடியாக இப்படத்தை ஓடிடியில் வெளியிட்டனர்.
ரசிகர்களுக்கு மத்தியில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில், தற்போது திரையரங்குகள் 50 % பார்வையாளர்க ளுகடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பழைய படங்களும் ஆங்கில படங்களும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்தவகையில் “சூரரைப்போற்று” படத்தை திரையரங்குகளில் வெளியீட முயற்சித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்தை இலவச விநியோக முறையில் அதாவது, படம் திரையிடப்பட்டு வரும் லாபம் அனைத்தையும் திரையரங்க உரிமையாளர்களே எடுத்து கொள்ளலாம். என திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.