ட்ரம்பின் மகள் இவான்காவை வாழ்த்திய பின், முகத்தை கடினமாக்கிய சித்தி! இணையத்தில் வைரலாக வீடியோ!
ட்ரம்பின் மகள் இவான்காவை வாழ்த்திய பின்பு அவரது மனைவி மெலனியா முகபாவனை மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வருகிற நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ட்ரம்பின் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு வடக்கு கரோலினா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கட்சியை சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று ட்ரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பொழுது அந்நிகழ்ச்சியில் ட்ரம்பின் மனைவிமெலனியா கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது ட்ரம்பின் மகள் இவான்காவை வாழ்த்திய பின்பு திடீரென தனது முக பாவனையை மெலனியா மாற்றிக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஆலோசகராக பணியாற்றக்கூடிய இவான்காவை வாழ்த்திய பின்பு மெலனியா செய்த செயலால் அதிபர் வருத்தப்பட்டு தழுதழுத்தது அங்கிருந்த பார்வையாளர்களை மிகவும் உருக வைத்துள்ளது.