குடையுடன் காற்றில் பறந்த வாலிபர் வைரலாகும் வீடியோ
நான் தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது காற்று அந்த குடையுடன் சேர்த்து என்னையும் மேலே தூக்கி சென்றது. சுமார் 2 அல்லது 3 மீட்டர் உயரம் வரை பறந்தேன்.
துருக்கி நாட்டில் ஒஸ்மானியே பகுதியில் காற்று பயங்கரமாக வீசியதால் பறக்க இருந்த நிழற்குடையை தடுத்து நிறுத்த முயன்ற சாதிக் கோகதள்ளி என்பவர் அந்த குடை உடன் சேர்ந்து பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சாதிக் கோகதள்ளி கூறுகையில், ஹோட்டல் வெளியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென காற்று பயங்கரமாக வீசியது. அப்போது அருகில் இருந்த நிழற்குடை பறக்க தொடங்கியது.
அதனை நான் தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது காற்று அந்த குடையுடன் சேர்த்து என்னையும் மேலே தூக்கி சென்றது. சுமார் 2 அல்லது 3 மீட்டர் உயரம் வரை பறந்தேன்.
அதிஷ்டவசமாக காயமின்றி நான் தப்பித்து விட்டேன் ஆனால் என்னுடன் இருந்த ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது என கூறியுள்ளார்.
https://youtu.be/779SyUui8LA