பெற்றோரிடம் சண்டைபோட்டால் ஒளிந்துகொள்ள நவீன குகையை உருவாக்கிய இளைஞர்…! வீடியோ உள்ளே…!

Default Image

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது பெற்றோருடன் சண்டையிடும் போது ஒளிந்து கொள்ள அதிநவீன குகையை உருவாக்கியுள்ளார். 

இன்று வளர்ந்து வரும் நாகரீகம் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு சிறிய சிறிய விஷயங்களுக்கும் இன்றைய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கோபித்துக் கொள்வது வழக்கமாகி உள்ளது.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் தனது பெற்றோருடன் சண்டை போட்டால் ஒளிந்து கொள்வதற்காக ஒரு அதிநவீன குகையை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கும், அவரது பெற்றோருக்கும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பதாக பெற்றோர் அந்த இளைஞரை டிராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கூறியுள்ளனர். இது  இளைஞரின் பெற்றோருக்கும் மற்றும் அந்த இளைஞருக்கு இடையே வாக்குவாதம் ஆக மாறியது.

இந்நிலையில்,  அந்த இளைஞர் தனது பெற்றோருடன் சண்டை போடும் நேரம் அங்கே ஒளிந்து கொள்வதற்காக மூன்று மீட்டர் ஆழத்தில் குழி ஒன்றைத் தோண்டி உள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பதாக உருவாக்கிய இந்த குகையில் தற்போது கழிப்பறை, வைஃபை மற்றும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளை அந்த இளைஞர் அமைத்துள்ளார். இளைஞரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tirupati
pongalgift
news of live
goa
california fire accident
martin guptill