அமெரிக்காவில் கெண்டகி பகுதியில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபல தனியார் ஊடகத்தை சார்ந்த ரிவெஸ்ட் என்ற பெண் ஊடகவியலாளர் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது ரிவெஸ்ட் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மர்ம நபர் ரிவெஸ்ட் கண்ணத்தில் முத்தமிட்டு சென்றுவிட்டார்.
இதை எப்படியோ ரிவெஸ்ட் சமாளித்துக் கொண்டு நேரலை முடித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் கிண்டல் அடித்தனர்.மேலும் ரிவெஸ்ட் சம்பவத்தை அவர் மீண்டும் மீண்டும் பார்த்தால் எரிச்சல் அடைந்தார்.
அந்த நபர் அவர் பின்புறத்தில் சைகை காட்டிக் கொண்டு பின்னர் வந்து தான் ரிவெஸ்ட் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து ரிவெஸ்ட் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் இதுகுறித்து அந்த நபரை தேடி கைது செய்து. விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அந்த நபர் கூறுகையில் , வேண்டுமென்று செய்யவில்லை விளையாட்டாக செய்தது. மேலும் ஊடகவியலாளரின் மனதை புண்படுத்த நான் செய்யவில்லை. நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் மீது ரிவெஸ்ட் பதிவு செய்த வழக்கை திருப்பிப் பெற்றுக் கொண்டார்.
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…