வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வருகிற 3ம் தேதி நடைபெறக்கூடிய ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் பேசிய அதிபர் டிரம்ப் அவர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் அவர்கள் நிறுத்தப்பட்டதற்கு கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் எனவும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்பமுடியாதது மட்டுமல்லாமல் அருவருப்பானது மற்றும் அவமானகரமானது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை அவர் வழி நடத்தாமல் தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை வழிநடத்துவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் சீனாவுக்கு ஆதரவாக அவரது வெற்றி அமையும் எனவும், சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிக்கும் எனவும், வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிராக தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் இதனால் விவசாயிகளுக்கு உதவும் முடிந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வரிகளை அவர் நீக்கி விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…