ஒரே நேரத்தில் மாற்றுப் பாலின அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் இரட்டையர்கள்!
பிரேசிலில் உள்ள இரட்டையர்கள் இருவர் ஒரே நேரத்தில் ஆண்களாக இருந்து பெண்களாக மாற்று பாலின அறுவை சிகிச்சை மூலமாக மாறியுள்ளனர்.
2002 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவை சேர்ந்த பிரேசிலில் உள்ள டபிரா எனும் கிராமத்தில் பிறந்த சோபியா அல்புர்க், மைலா ரெசன்டே எனும் இரட்டையர்கள் பிறப்பிலேயே ஆண்களாக தான் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் நாளுக்கு நாள் பெண்களின் தன்மை அதிகரித்து வந்ததையடுத்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தாங்கள் முழுவதும் பெண்களாக மாறி இந்த சமுதாயத்தில் வாழ விரும்புவதாக இரட்டையர்கள் இருவருமே ஒரே நேரத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மாற்று பாலின அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த இரட்டையர்கள் தங்களது தாத்தாவின் ஆதரவுடன் சொத்து ஒன்றை விற்பனை செய்து 15 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். இதனை அடுத்து இந்த இரட்டையர்கள் இருவரும் 5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுவதுமாக பெண்களாக மாறியுள்ளனர். முதல்மறையாக உலகத்திலேயே இரட்டையர்களாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இவர்கள் தான். இது குறித்து தெரிவித்துள்ள இரட்டையர்களில் ஒருவர் தனது உடலை தான் எப்பொழுதும் நேசிப்பதாகவும், தனக்குப் பிடிக்காத ஒரு உறுப்பு இந்த அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது தனக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது உலகிலேயே முதன்முறையாக இந்த இரட்டையர்கள் தான் பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு உள்ளதால் பலர் மத்தியிலும் இவர்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது.