ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உலக நாடுகள் அடைக்கலம் தர வேண்டும் – மலாலா!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு உலக நாடுகள் அடைக்கலம் தர வேண்டும் என மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணிச்சலுடன் முன்வந்து ஆப்கான் மக்களை பாதுகாக்க வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறிய அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் தர உலக நாடுகள் முன் வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் நெருக்கடியான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து மிகுந்த கவலை அடைவதாகவும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை பாகிஸ்தான் அனுமதிக்குமாறு அதிபர் இம்ரான் கானுக்கு தான் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளார்.