மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.!முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த உலகநாயகன்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை நேற்று கொண்டாடும் வகையில் பிரதமரும், குடியரசுத் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் . அந்த வகையில் நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிட செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று கூறியுள்ளார். எப்போதும் மறைமுகமாக கருத்தை கூறும் கமல்ஹாசன், மக்களின் முகத்திலும் புன்னகையை பரவ செய்ய வேண்டும் என்றும், மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று கூறியதில் மறைமுகமாக மக்களின் கோவத்தை குறிப்பிட்டுள்ளாரா என்று நெட்டிசன்கள் பலர் இந்த டுவீட்டுக்கு பல அர்த்தங்கள் சித்தரித்து வருகின்றனர். இருப்பினும் அவரது இந்த டுவீட்டுக்கும் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் @CMOTamilNadu அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2020