“சீனா செய்த தவறுக்கு உலகமே விலை கொடுத்து வருகிறது”-டிரம்ப் குற்றச்சாற்று!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து சீனா உலக நாடுகளுக்கு முன்னே தெரிவித்தால், உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும்.
மேலும் அவர், சீனா செய்த தவறுக்கு உலகமே விலை கொடுத்துவருகிறது எனவும் கொரோனா பற்றிய உண்மை தகவல்களை வெளியிடாதால் பெரிதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சீனாவை விமர்ச்சித்துள்ளார்.