தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டு மரண ஒத்திகை நடத்திய பெண்…! வீடியோ உள்ளே…!

தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டு மரண ஒத்திகை பார்த்த பெண்.
டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மெய்ரா என்ற ஒரு பெண் தனது இறுதி சடங்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டார். இதனை அடுத்து அவர் இறுதி சடங்கு ஒத்திகை ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த இறுதிச் சடங்கிற்கு ஒத்திகையில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சாண்டியாகோ நகரில் உள்ள தனது மரண ஒத்திகையை நடத்த ஏற்பாடுகள் செய்தார். இந்த ஏற்பாடுகள் ஏப்ரல் மாத இறுதியில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாடகைக்கு ஒரு சவப்பெட்டி எடுத்துள்ளார். அவள் வெள்ளை நிற உடையணிந்து நாசியில் பத்து மூடப்பட்ட நிலையில், அந்த பெட்டியினுள் படுத்துள்ளார்.
அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த ஒத்திகையில் பங்கேற்று போலியாக அழுதுவிட்டு விடை பெறுகின்றனர். இந்த ஒத்திகைக்கு $1,000 வரை செலவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில் கனவு நினைவாகும். இந்த ஒத்திகைக்கு ஏற்பாடு செய்ய உதவிய தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.