இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார்.
அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் மணப்பெண் மணமகன் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இது குறித்து பேசியுள்ள தெபொரா இனி எனக்கு இழப்பதற்கும் எதுவும் இல்லை, புதிதாக எதுவும் கிடைக்கபோவதுமில்லை. ஏற்கனவே நான் எனது இரண்டு குழந்தைகளை இழந்துள்ளேன். அதனால் தான் எனது இந்தியாவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொண்டுள்ளேன்.
எனது பூனையை நான் எப்பொழுதும் பிரிய மாட்டேன் என நான் முடிவு செய்துள்ளேன். அது எனது வளர்ப்பு விலங்கு மட்டுமல்லாமல் எனது பிள்ளையை போல பார்த்துக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் எங்களை இனி யாரும் பிரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…