குழந்தையின் மீதுள்ள ஆசையால், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கீறி குழந்தையை எடுத்த பெண்.
இன்று கொலை,கொள்ளை மிகவும் சகஜமான ஒன்றாக மாறி விட்டது. அந்த வகையில், பிரேசில் நாட்டில் பமில்லா பெரீரா என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் குழந்தை இல்லாததால், குழந்தையை தேடி பார்த்துள்ளனர், கிடைக்கவில்லை.
இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட அதே சமயத்தில் அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இறந்த குழந்தையுடன் சென்றுள்ளார். அவர் தான் வீட்டில் தனியாக குழந்தை பெற்றுக் கொண்டதாகவும், படியில் இருந்து இறங்கும்போது குழந்தை கை வழுக்கி கீழே விழுந்து விட்டதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், அப்பெண் கர்ப்பிணி பெண் இல்லை என தெரிய வந்ததையடுத்து, மருத்துவர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த பெண் கர்ப்பிணி போல் நடித்தது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட பமில்லா உடன் இந்த கொலை நடப்பதற்கு முந்தைய நாள் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அக்குழந்தை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில், குழந்தை மீதுள்ள ஆசையால் அப்பெண் பமில்லாவின் வயிற்றை கொடூரமான முறையில் குழந்தை எடுத்துள்ளார் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…