வலது கை, இடது கை வித்தியாசம் தெரியாததால் டாட்டூ குத்திக் கொண்ட பெண்!
சிட்னியை சேர்ந்த ஒரு பெண் தனக்கு வலது கை மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாததால், வலது கையில் R என்றும், இடது கையில் L என்றும் டாட்டூ குத்தி உள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு சில பொருளுக்கு எளிதில் வித்தியாசம் காண்பது மிகவும் கடினமாக காணப்பட்டாலும், வலது மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிப்பதில் கூட பெரியவர்களும் சற்று திணறுவது உண்டு.
அந்த வகையில் சிட்னியை சேர்ந்த ஒரு பெண் தனக்கு வலது கை மற்றும் இடது கை வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாததால், வலது கையில் R என்றும், இடது கையில் L என்றும் டாட்டூ குத்தி உள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இதற்கு விளக்கமளித்த அவர் சிறு வயது முதலே வலது கை மற்றும் இடது கை அடையாளம் காண முடியாமல் தவித்து வந்ததாகவும், அதனால் கேலிக்குள்ளானதாலும் இவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.