மீண்டும் இத்தாலியில் நடைமுறைக்கு வரும் ‘wine window’ பழக்கம்!
மீண்டும் இத்தாலியில் நடைமுறைக்கு வரும் ‘wine window’ பழக்கம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த இக்கட்டான கால கட்டத்தில் மக்கள் கண்டிப்பாக சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியில் உள்ள உணவகம் மற்றும் பார்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு பழங்கால முறைகளில் ஒன்றான, ‘Wine Window’ பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. உணவகங்களின் கான்கிரீட் சுவர்களில், ஜன்னல் போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். அதில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் ஒயின்களை வழங்குவார்கள். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமல்லாமல், விற்பனையும் எப்போதும் போல் நடைபெறும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் புபோனிக் பிளேக் நோய் பரவத் தொடங்கிய போது, இதுபோன்ற ஜன்னல் மூலம் விற்பனை செய்யும் முறையை அக்கால மக்கள் அறிமுகப்படுத்தினர். அந்த வகையில், தற்போது இத்தாலியில் ஒயின் ஜன்னல்கள் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் பொருளாதாரத்திற்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், மக்களுக்கும் பாதுகாப்பான உணர்வு இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.