கனடாவில் பரவும் பயங்கர காட்டு தீ
கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில், உள்ள வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக காட்டு தீ பரவி வருகிறது. இந்த காட்டு தீ சுமார் 97,000 ஹெக்ட்டர் பரப்பளவில் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனையடுத்து, காட்டுத்தீயை ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் முயற்சியில் 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். காட்டு தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதால், 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.