கணவருக்கு தெரியாமல் வேறொருவருடன் தொடர்பில் இருந்த மனைவி.! வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்த கூகுள் மேப்.!
கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ நுட்பத்தின் மூலம் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை கணவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெருவின் லிமா நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் வேறொருவருடன் தொடர்பில் இருந்ததை கூகுள் மேப் வாயிலாக பார்த்துள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். கூகுள் மேப்பிலுள்ள ஸ்ட்ரீட் வியூ என்ற நுட்பத்தின் மூலம் தனது மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
லிமா நகரத்தில் உள்ள ஒரு நடைப்பாதை பெஞ்சில் அவரது மனைவியின் மடியின் மீது வேறொரு நபர் படுத்திருக்க, மனைவியின் முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அவர் உடுத்திருந்த ஆடையை வைத்து மனைவி என்று கண்டுபிடித்துள்ளார். இதனை கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ நுட்பத்தின் மூலம் பார்த்த போது அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது மனைவியுடன் கேட்க அவரும் மறுக்காமல் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.