ஒட்டகச்சிவிங்கியை கொன்று, அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தின பரிசாக கொடுத்த மனைவி!
தென்னாப்பிரிக்காவில் உள்ள பெண்மணி ஒருவர் வயதான ஒட்டகச்சிவிங்கி ஒன்றை கொன்று அதன் இதயத்தை தனது கணவருக்கு காதலர் தின பரிசாக கொடுத்து உள்ளதுடன், தனது ஐந்து ஆண்டுகள் நிறைவேறியதாக பெருமையுடன் இணையதள பக்கத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வசிக்க கூடிய மெரலைஸ் வான் டெர் மெர்வே எனும் பெண்மணி தனது ஐந்து வயது முதலே வேட்டையாடுவதில் அதிக பிரியம் கொண்டவராம். தற்போது 32 வயது ஆகிறது, இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு லிம்போபா மாகாணத்தில் உள்ள சிட்ரஸ் எனும் பண்ணையை நடத்தி வரக்கூடிய இந்தப் பெண்மணி சிங்கம், சிறுத்தை, யானை என 500க்கும் மேற்பட்ட விலங்குகளை இதுவரை வேட்டையாடி உள்ளாராம். இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக இவருக்கு ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். அந்த கனவு தற்பொழுத நினைவாக உள்ளதாக தனது இணையதள பக்கத்தில் அவர் வேட்டையாடிய ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கையில் வைத்துள்ளபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த செயல் அவருக்குப் பெருமையாக இருந்தாலும் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம், வயதான ஒட்டகசிவிங்களி ஒன்றை இவர் வேடடையாடியுள்ளார். அவர் வேட்டையாடிய இந்த ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை அவரது கணவருக்கு காதலர் தின பரிசாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டகச்சிவிங்கியின் தோல் அந்தப் பெண்மணிக்கு மிகவும் பிடிக்குமாம். இது குறித்து தெரிவித்துள்ள ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடிய பெண்மணி மெரலைஸ் வான் டெர் மெர்வே, இது தனது ஐந்து ஆண்டு கனவு என கூறியுள்ளார்.
மேலும், ஆப்பிரிக்காவின் சின்னமான ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுவதற்காக பல ஆண்டுகள் காத்து இருந்ததாகவும், தற்போது தனது கனவு நினைவாக உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் ஒட்டகச்சிவிங்கியின் இதயம் எவ்வளவு பெரியது என்று எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? எனவும் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் கொன்ற ஒட்டகச்சிவிங்கியின் தோலை ஒரு கம்பளமாக பயன்படுத்தப் போவதாகவும் தனக்கு மற்றும் தனது உள்ளூர்வாசிகளுக்கு இன்று நிறைய இறைச்சி கிடைக்க உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.