பிக் பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி – ஆனந்த கண்ணீரில் ரியோ!
பிக் பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதல் மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தையால் ஆனந்த கண்ணீரில் ரியோ.
பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதுவும் ரியோ, ஆரி, அர்ச்சனா ஆகிய சில போட்டியாளர்களுக்கு குழந்தைகளும் உள்ளது. அந்த பிரிவு எவ்வளவு கொடுமையானது என்பது நாம் அறிவது தான், ஆனால் நம்மை விட அவர்களுக்கு அந்த பிரிவு மிகக் கொடூரமாக இருக்கும்.
இந்நிலையில் ரியோவுக்காக ஸ்ருதி சர்ப்ரைஸாக பேசி தனது குழந்தையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ஆனந்தத்தில் கண் கலங்குகிறார் ரியோ, அதில் நீ சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு பாசிட்டிவாக இரு லவ் யூ மிஸ் யூ என ஸ்ருதி கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram