கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை 49 பயணிகள் மற்றும் 3 விமான குழு உறுப்பினர்கள் கொண்ட டாஷ் 8-300 என்ற ஏர் கனடா விமானம் மாண்ட்ரீல் -ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து சாகுவேனுக்கு புறப்பட்டுச் சென்றது.
அப்போது விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போது விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதன் காரணமாக விமானம் மேல பறக்க முயன்றபோது விமானத்திலிருந்த ஒரு சக்கரம் கழண்டு கீழே விழுந்தது.
பிறகு விமானத்தை தொடர்ந்து பறந்து சென்ற பிறகு மீண்டும் டாஷ் 8-300 என்ற விமானம் மாண்ட்ரீல் -ட்ரூடோ விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து அந்த ஏர் கனடா நிறுவனம் கூறுகையில், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சமாளிக்க விமானிகளுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அவரச வாகனங்கள் கொண்டுவரப்பட்டு இருந்தது. விமானத்தில் ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிந்து பின்னர் அதற்குரிய பழுது பார்க்கப்படும் என கூறியுள்ளது.
இதையடுத்து பயணிகள் மற்றொரு விமானம் மூலம் திட்டமிட்டபடி சாகுவேனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…