வன்முறையில் நடந்த வங்கதேச தேர்தல்……காவல்துறை அதிகாரியுடன் சேர்த்து 10 பேர் உயிரிழப்பு…!!
வங்கதேசத்தில் நடைபெறுகின்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை அதிகாரியுடன் சேர்த்து உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவரை, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.இதனால் பல இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.சுமார் 64 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.