மாஸ்டர் படத்தில் லீக்கான வில்லன் பவானியின் லுக்.!
வில்லனாக நடிக்கும் பவானி என்ற விஜய் சேதுபதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுவது போன்ற புகைப்படமாகும். தற்போது இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.
மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது. அதிலும் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உலகளவில் அந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து டிரெண்டாகி வருகிறது.
சமீபத்தில் கூட மாஸ்டர் படத்திலுள்ள பொளக்கட்டும் பர பர பாடலில் விஜய் சேதுபதியின் கெட்டப்பை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் வில்லனாக நடிக்கும் பவானி என்ற விஜய் சேதுபதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுவது போன்ற புகைப்படமாகும். தற்போது இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Master This Making Video Therikkuthu….????????
Bhavani ????????#Master pic.twitter.com/GPFCo6T2JJ
— VɪʟʟᴀɪN ッ (@Villain_Offl) May 25, 2020