100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஈஸ்வரன் படத்தின் பாடல்.!!
ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றிருந்த மாங்கல்யம் தந்துனானே என்ற பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மாங்கல்யம் தந்துனானேஎன்ற வீடியோ பாடல் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியானது அந்த பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த பாடலை சிம்பு, ரோஷினி ஜே கே வி & தமன் எஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்த பாடலை எழுதியுள்ளார். சிம்பு சினிமா பயணத்தில் முதன் முதலாக யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது.
27th Tamil Song To Hit 100 Million Views On Youtube !!
3rd Fastest Of Tamil Songs !!
And Very First Of Our Thalaivan @SilambarasanTR_ !!#100MviewsforMangalyam https://t.co/Q62TOegrY2
— Hᴇᴀʀᴛ ʙᴇᴀᴛ ᴏꜰ ᴄʜɪᴍʙᴜ (@Donndavish) May 26, 2021