கொரோனவை கொல்லும் பாம்பின் விஷம்…! பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!
ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸானது, இன்று உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆட்டி படைத்தது வருகிறது. இந்த வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரேசிலை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனா தொற்று பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆயின் ஆய்வாய் நடத்திய விஞ்ஞானி ரபேல் கைடோ இதுகுறித்து கூறுகையில், ஜரரகுசு பிட் வைபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரசில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், அதே நேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால், ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்து உள்ளார்.
இந்த பாம்பானது, 6 அடி (2 மீட்டர்) நீளம் கொண்டது. பிரேசிலின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்று ஜரராகுசு. இது கடலோர அட்லாண்டிக் காட்டில் வாழ்கிறது. மற்றும் பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜென்டினாவிலும் காணப்படுகிறது.