தேனீக்களை காக்க களத்தில் இறங்கிய அமெரிக்கா.! உலகின் முதல் தடுப்பூசி இதோ…

Default Image

தேனீக்களை பாதுகாக்க அமெரிக்க விவசாயத்துறை புதிய தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. 

யு.எஸ்.டி.ஏ எனும் அமெரிக்க விவசாயத்துறை கடந்த  2006 ஆம் ஆண்டு முதல் தேனீக்கள் குறித்த வருடாந்திர குறைப்புகளை ஆராய்ந்து வருகிறது. மகரந்த சேர்க்கைக்கு பயன்படும் சுற்றுச்சூழல் அமைப்பின் பல அம்சங்களில் தேனீக்கள் பங்கு  மிக முக்கியமானவை.

ஆனால், ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் உட்பட பல்வேறு காரணிகள் தேனீ ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது என USDA அமெரிக்க விவசாய அமைப்பு கூறுகிறது.

இதனை தடுக்கும் வகையில் தான், தற்போது புதிய தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க விவசாயத் துறை (யுஎஸ்டிஏ) இந்த வாரம் நிபந்தனையுடன் உரிமம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் ராணி தேனீக்கு அளிக்கப்படும் ராயல் ஜெல்லியில் பாக்டீரியாவின் செயலற்ற பதிப்பை உள்ளீடு செலுத்துவதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து செயல்படுகிறது. அதன் மூலம் தேனீ லார்வாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகின்றன.

இந்த தடுப்பூசியானது தேனீக்களைப் பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையாக செயல்படும் என விலங்கியல் நல தலைமை நிர்வாக அதிகாரி டாலன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்