சர்வதேச நிதிக் கழகத்திற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை அமெரிக்க உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது..!
சுற்றுச்சூழலை பாதிக்கும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடனுதவி செய்த சர்வதேச நிதிக் கழகத்திற்கு (International Finance Corporation) எதிராக, குஜராத்தை சேர்ந்த கிராமத்தினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை அமெரிக்க உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
உலக வங்கியின் கீழ் செயல்படும், அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச நிதிக் கழகம், குஜராத்தின் முந்தரா (Mundra) பகுதியில் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு 450 மில்லியன் டாலர் கடனுதவி அளித்துள்ளது.
நிலக்கரியை எரித்து மின்னுற்பத்தி செய்யும் இந்த டாடா முந்த்ரா மின் நிலையத்தால் (Tata Mundra Power Plant) சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த திட்டத்திற்கு பொறுப்பற்ற முறையில் கடனுதவி செய்த சர்வதேச நிதிக் கழகத்திற்கு எதிராக, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அமெரிக்காவில் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர். அங்கும், அதற்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.