தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது -அமெரிக்கா

Default Image
  • இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
  • தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நேற்று முன்தினம்  (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை  தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட்,  முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள  தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும்  விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.

ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது:

Image result for india pakistan

நேற்று பாகிஸ்தான் ராணுவம் F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்தது இதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது என்று விமானப்படை  தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டது.இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.இதனால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் தொடர் பதற்றம் நீடித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்கா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியது.நேரடி பேச்சுவார்த்தை மூலம், இருநாடுகளும் சுமூக முடிவுக்காண வேண்டும். ராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் .தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது, அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடை செய்ய பாகிஸ்தான் அரசை வலியுறுத்துவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்