ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
அதன்படி,நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே,உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.மேலும், உக்ரைனுக்கு உதவ துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அனுப்பி வைக்கின்றன.
இந்நிலையில்,ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உரையாற்றுகிறார்.இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியில் இனி ரஷ்ய விமானங்கள் பறக்க கூடாது என அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட உள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…