காபூல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரான்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, தலிபான் ஆட்சிக்கு எதிரான மக்கள், வெளிநாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஏரளனமானோர் கூடி வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க படைகள் படிப்படியாக தாயகம் திரும்பி வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் படைகளை திரும்ப பெற வேண்டும் என தலிபான் அமைப்பினர் காலக்கெடு விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக மீட்டு வரும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் தற்போது வரை 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புபொறுப்பேற்றது. இந்த நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரான்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் கோரசான் தீவிரவாதி அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியவர்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025