தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியில் இறங்கிய அமெரிக்கா.!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 167 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6606 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 3,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை இன்று அமெரிக்கா தொடங்கியுள்ளது. வாஷிங்டனில் உள்ள சுகாதார ஆராய்ச்சி மையத்தில் ஆரோக்கியமாக உள்ள 45 பேரிடம் இந்த தடுப்பூசி மருந்து சோதனை செய்யப்படுகிறது.
இன்று 43 வயதான ஜெனிபர் ஹெலர் என்ற பெண்ணிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்த கட்டங்களில் இந்த பரிசோதனை முடிவுகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிய வந்த பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.