ஆப்கனில் பெண்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தடை.! முடிவை திரும்ப பெற ஐநா வலியுறுத்தல்.!
அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் இருக்கிறது. அவர்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் அண்மையில், பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதித்து இருந்தனர். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது, புதியதாக, அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ளனர். பெண்கல்வி தடைக்கு அடுத்தபடியாக வெளியான இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.