ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு ஐநா கண்டனம்…!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- ஐநா_வில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை கண்டிப்பதுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் பயங்கரவாதம் ஒருபோதும் சகித்துக்கொள்ளவே முடியாது என்று குறிப்பிட்ட பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு மற்ற நாடுகள், உதவிகளையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட்து.
மேலும் இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.