உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி ஆகிய நககரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. மேலும்,மக்கள் பாதுகாப்பான நிலவறைக்குள் சென்று பதுங்கி கொள்ளுமாறும் உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது.அதே சமயம், விமான தாக்குதல் குறித்து முன் கூட்டியே எச்சரிக்கும் வகையில் தலைநகர் கீவில் சைரனும் ஒலிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம்,உக்ரைன் தலைநகர் கீவ் மட்டுமல்லாமல்,பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.அது தவிர விமான தளங்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றை தாக்குவதற்கு ஏற்ற வகையில் அப்பகுதிகளை சுற்றி ரஷ்யா தனது படைகளை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…