உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர்!

Default Image

உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர் எட்வர்ட்.

இங்கிலாந்து நாட்டின் பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் தென் மாநில மக்களின் விருப்பமான உணவாகிய இட்லி தான் உலகிலேயே மோசமான உணவு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்டதற்கு தமிழக மக்கள் சும்மா இருப்பார்களா? தென் மாநிலங்களில் ஏராளமான மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் எம்பி சசிதரூர் அவர்களின் மகனும் கடும் விமர்சனத்துடன் கூடிய கண்டனத்தை எழுப்பியுள்ளார். இந்நிலையில் அவரது மகனுக்கு பதிலளித்து மறுட்விட் செய்துள்ள சசிதரூர், மகனே இட்லியின் சுவை பாராட்டுவதற்கும் கிரிக்கெட்டை ரசிப்பதற்கும் எல்லாருக்கும் அறிவு இருக்காது.

வாழ்க்கை என்பது என்னவென்றே தெரியாமல் இருக்கும் இதுபோன்ற மனிதரைப் பார்த்து பரிதாபப்படு என கூறியுள்ளார். இந்நிலையில் சாதாரணமாக தான் கூறிய இட்லியில் பெயர் உலகம் முழுவதிலும் வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து அந்தப் பேராசிரியர் எதிர்பாராத விதமாக இந்திய மக்களை நான் மன கஷ்டம் அடைய செய்துவிட்டேன், அதற்கு என்னை மன்னிக்கவும். எனக்கு இந்திய உணவாகிய தோசை ஆப்பம் ஆகியவை பெரும்பாலும் எனக்கு பிடிக்கும். ஆனால் இட்லியையும் புட்டையும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது இந்த கருத்தில் மாற்றமில்லை என மீண்டும் கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டி கொண்டு உள்ளார் எட்வர்ட்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்