உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பை பெரிய திரைகளில் பார்த்து ரசித்த மக்கள்!
இன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது.
டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.
சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை கண்டனர்.
தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் – கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.