டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை – விவாதத்தில் கமலா ஹாரிஸ் பேச்சு
டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில் ,அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.இந்த விவாதம் ,அமெரிக்காவின் சால்ட் லேக்கில் உள்ள உட்டா பல்கலைக் கழகத்தில் (The University of Utah ) விவாதம் நடைபெற்றது. அப்பொழுது ,குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் பேசுகையில், கொரோனாவை டிரம்ப் அரசு சவாலாக எதிர்கொண்டு வருகிறார். பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், கொரோனாவை வெள்ளை மாளிகை எதிர்கொண்ட விதம் சரி இல்லை .கொரேனாவிற்கு 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் டிரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர் என்றும் டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை என்று பேசினார்.இதற்கு பதில் அளித்து பேசிய மைக் பென்ஸ், கொரோனா உயிரிழப்புகளை குறைத்துள்ளதாக பதிலடி கொடுத்தார்.