இசையமைக்க விடாமல் தொந்தரவு தருகிறார்கள் ! இளையராஜாவின் உதவியாளர் போலீசில் புகார் !

Default Image

சென்னையில் வடபழனியில் எல்.வி பிரசத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ 1 ஐ இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக அந்த இடத்தில்  வைத்து இசை அமைத்து வருகிறார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பிரசாத் ஸ்டூடியோ தியேட்டரை ஆக்ரமித்ததாக இளையராஜாவின் உதவியாளர்  கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநர் மற்றும் எல்.வி பிரசாத்தின் பேரனுமான சாய் பிரசாத் ஸ்டுடியோ  1-ல் சில மேசைகளை போட்டு அதில் 20 கணினிகளை வைத்து இசை அமைக்க விடாமல் இடையூறு செய்வதாக இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோ இயக்குநர் சாய் பிரசாத் மற்றும் பாஸ்கர் ,சிவராமன் உள்ளிட்ட ஊழியர்கள் மீதும் தபால் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்