செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டது. அதன்படி, அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் கடந்த 8ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, வழக்கு தொடர்பாக ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. ஆனால், செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…