ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார்.
மேலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ராதாரவி, பாலா, சேசு போன்றோர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த மாதம் முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தின் ட்ரைலருக்காக காத்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…