மறைந்த சுஷாந்த் சிங்கின் கடைசி படமான “Dil Bechaara” படத்தின் டிரைலர் நாளை .!

மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தின் டிரைலர் நாளை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .டிரைலர் நாளை வெளியிடப்பட உள்ளதாக முகேஷ் சாப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Dil Bechaara’ படத்தின் போஸ்டருடன் அறிவித்துள்ளார்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025