சொந்த ஊருக்கு செல்லும் போது நடந்த சோகம் பிரபல பாடகி உயிரிழப்பு..!

Default Image

மராத்தி பிரபல பாடகி கீதா மாலி.  இவர் ஏராளமான திரைப்பட பாடல்களுக்கு பின்னணியாக பாடியுள்ளார்.இவர் தனியாகவும் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று காலை  மும்பை வந்தார்.
மும்பையில் இருந்து நாசிக்கில் உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் தான் கணவர் விஜய்யுடன் சென்று உள்ளார்.அப்போது தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் அருகே அதிகாலை மூன்று மணி அளவில் கார் சென்று கொண்டுஇருந்தது.
இந்நிலையில் அங்கு சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது.இதில் கீதா மாலி மற்றும் அவரது கணவர் விஜய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இருவரையும் சாஹப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிக்சை பலனின்றி கீதா மாலி உயிரிழந்தார்.இவரது கணவர் விஜய்க்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war