மங்கோலியாவில் இன்றும் கடைபிடிக்கப்படும் பாரம்பரியம் ..!
உலகம் முன்னேற்ற பாதையில் முழு வீச்சில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் மங்கோலியாவின் பழங்குடிகள் இன்னமும் ஆயிரம் ஆண்டு பழமையான வாழ்க்கையில் உள்ளனர்
அந்நாட்டின் தைக்கா வனத்தில் வசிக்கும் டுக்கா பழங்குடிகளின் வாழ்க்கை பனிப்பிரதேசத்தில் வசிக்கும் கலை மான்களை சார்ந்தே உள்ளது.
ஆடு, மாடுகளை போல மான்களை மேய்க்கும் தொழிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த பழங்குடிகள் இன்னமும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மான்களை வளர்த்து, உணவுக்கும் விற்பனைக்கும் பயன்படுத்துவதே வாழ்நாள் பணியாக கொண்டுள்ள அவர்களை காக்க மங்கோலிய அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காலம் எத்தனை மாறினாலும், கலைமான்களே வாழ்வென இருக்கும் பழங்குடிகள் தங்கள் போக்கிலே வாழ்வை களிக்க அந்நாட்டு அரசும் ஆவண செய்துள்ளது.