டாப் தலைவர்களின் ட்விட்டர் ஹேக்! சர்வதேசம் ஹாக்!
பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயின் எனப்படுகின்ற டிஜிட்டல் கரன்சி அல்லது, கிரிப்டோ கரன்சி எனப்படுகின்ற கணினி வழி பணப் பரிவர்த்தனையானது பிரபலம் அடைந்து வருகின்றது.
இதனால் உலகெங்கும் டிஜிட்டல் நாணயங்களுகென தனி மையங்கள், இயங்குகின்றன. மேலும் கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும் கூட இந்த பிட் காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் ஜோபைடன், தொழிலதிபர்கள், எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள் ஆனது நேற்று ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியது.
இதன் பின்னணியில் பிட்காயின் பரிவர்த்தனை செய்கின்ற கும்பலுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்ததுள்ளது.
மேலும் இவர்களை தவிர முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஆப்பிள், உபேர் ஆகிய நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளும், ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்து உள்ளதால் பெரும் பரபரப்பு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.
பிட்காயின் பரிவர்த்தனை செய்கின்ற கும்பல் சமூக வலைதளமான டுவிட்டர் கணக்கிற்குள் எப்படி புகுந்தது? குறித்து உரிய விசாரணை நடத்தி வருவதாக சம்பந்தப்பட்ட டுவிட்டர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் இது போன்ற ஒரு நிகழ்வு மிகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளதாக கடும் கண்டனம் எழுந்துள்ளது.
We are aware of a security incident impacting accounts on Twitter. We are investigating and taking steps to fix it. We will update everyone shortly: Twitter statement pic.twitter.com/i8OG4aG6Uw
— ANI (@ANI) July 15, 2020