மூன்றாவது அணியால் தேசிய கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – ஹெச்.ராஜா…!!
மூன்றாவது அணியால் தேசிய கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ராணி வேலுநாச்சியாரின் 222ஆவது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை அரண்மனை வாயிலில் அமைந்துள்ள வேலு நாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, 3வது அணியால் தேசிய கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். மேலும், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி ஆகியோரது வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.