மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.! குஷியில் தளபதி ரசிகர்கள்.!

Default Image
  • தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தில் இருந்து குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது.
  • அதில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் என இரண்டும் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பித்து டெல்லி சென்று படப்பிடிப்பை நடத்திவிட்டு, பின்னர் கர்நாடகாவில் ஷிமோகா என்ற இடத்தில சில முக்கிய காட்சிகளை படமாக்கியது. அதனை தொடர்ந்து சென்னை திரும்பிய படக்குழு ராயபுரம், வியாசர்பாடியில் என பல முக்கிய பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால், சென்னையில் முடிவடையும் வேளையில் அடுத்தகட்டமாக படக்குழு நெய்வேலி சென்று கிளைமேக்ஸ் காட்சிகளை எடுக்கவுள்ளது.

இதனிடையே, தளபதி ரசிகர்களுக்கு தற்போது குஷி படுத்தம் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதவாது நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அப்டேட்டை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் நாளை வெளியாகும் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இருவரின் லுக் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். என்னினும் எந்த லூக்கா இருந்தாலும் அதில் தளபதி இருந்த போதும் அதை உலகளவில் வைரலாகிருவார்கள் . அதனால் நாளை முழுவதும் சமுக வலைத்தளம் தளபதி ரசிகர்கள் கையில் தான் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்