ஏ. ஆர் முருகதாஸிடம் சம்பளத்தை குறைக்க கேட்ட போது, அவரும் உடனடியாக தனது சம்பளத்தில் 10கோடி வரை குறைத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாக விருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வுள்ளதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. விஜய், ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் துப்பாக்கி 2 படமாக இருக்க கூடும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
தற்போது கொரோனா காரணமாக பல தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை விஜய் ஆண்டனி, ஆர்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் புரிந்து கொண்டு தனது சம்பளத்தை குறைக்க முன் வந்துள்ளனர். அந்த வகையில் விஜய்யின் 65வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பளத்தில் காம்பிரமைஸ் செய்ய விஜய் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன . ஆம், விஜய்யிடம் அவரது சம்பளத்தில் 10 அல்லது 20 கோடி வரை குறைக்குமாறு கேட்டு உள்ளார்களாம். மேலும் ஏ. ஆர் முருகதாஸிடம் சம்பளத்தை குறைக்க கேட்ட போது, அவரும் உடனடியாக தனது சம்பளத்தில் 10கோடி வரை குறைத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…