நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் கடந்த சில நாட்களிற்கு முன்பு கலந்துகொண்டார் படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வந்தது.
இந்த ஜன கன மன படத்தில் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹாலிவுட் அளவிற்கு சண்டைக்காட்சி இடம்பெறும் என்பதால் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த படத்தில் பணியாற்றிவருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பை படமாக்க படக்குழுவினர் வெளி நாடுகளில் சென்று எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் படத்திற்கான படப்பிடிப்பை முழுவதுமாக படக்குழுவினர் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…