பயணத்தால் வந்த சோதனை.? மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா.?
உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 1,604,736 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 95,735 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 356,671 பேர் குணமடைந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் சாதாரணவர்கள் முதல் உலக தலைவர்களள் வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அரசர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த வரிசையில் சவுதி அரேபிய மன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வந்துள்ளது. தலைநகர் ரியாத்தின் ஆளுநரும், இளவரசருமான 70 வயதுடைய பைசல் பின் பந்தர் பின் ஆஸிஸீக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியதால் அரசர் சல்மான் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அரச குடும்பத்தில் மேலும் பலருக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக சிறப்பு மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது. இளவரசர்கள் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,287 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 44 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.