ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனை முடிந்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தை வருகின்ற அக்டோபர் 13 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படப்பிடிப்பு தள்ளி சென்றதால் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…